எல்லா வகையான உணவுகளையும் தின்று பார்த்துவிட்டு நோயாளராகி இறுதியில் கம்பும், கேழ்வரகும், பழஞ்சோறும், நீராகாரமுமே சிறந்தது என்று உணர்ந்தோம்.
எல்லா வகையான உலோகங்களிலும் பண்ட பாத்திரங்கள் செய்துவிட்டு இறுதியில் மண்சட்டியும் மண்பானையுமே பக்க விளைவுகள் அற்றவை என்ற பக்குவத்திற்கு வந்திருக்கிறோம்.
எல்லா வகையான சொகுசுந்துகளிலும் நோகாது பயணித்துவிட்டு இறுதியில் கைகால் வீசி நடப்பதுதான் உயிராற்றலைக் காப்பது என்று தெரிந்து கொண்டோம்.
எல்லா வகையான ஈருருளிகளையும் வாங்கி ஓட்டிப் பார்த்துவிட்டு இறுதியில் மிதிவண்டி தான் உடலுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்றது என்று புரிந்து கொண்டோம்.
எல்லா வகையான செயற்கை உரங்களையும் வேதிப்பொருள்களையும் பயன்படுத்தி மண்ணைக் கெடுத்துவிட்டு இறுதியில் இலை தழை உரங்களும் பசுஞ்சாணமும் பஞ்சகவ்யமுமே உரமூட்டுவது என்று அறிந்து கொண்டோம்.
எல்லா வகையான அறிவியல் கண்டு பிடிப்புகளையும் நிகழ்த்திவிட்ட நாம் புதிதாய் ஒரு விதையை உருவாக்க முடியாது என்பதில் திகைக்கிறோம்.
இப்படி நிறையவே சொல்லலாம். இதில் இன்னும் ஒன்றேயொன்று மீதமிருக்கிறது.
எல்லா வகையான மாட மாளிகைகளையும், ஆடம்பரக் கட்டிடங்களையும் கட்டுவதற்காக மலைகளையும், மரங்களையும், விளை நிலங்களையும், ஆற்றையும், காற்றையும் வரம்பின்றி அழித்த நாம், இனி நம் மூதாதையர் வாழ்ந்தது போல் கீற்றுவேய்ந்த கூரை வீடுகள்தான் சிறப்பு என்ற இடத்திற்கும் அவற்றில் வசிப்பதற்கும் வந்தே ஆகவேண்டும். எல்லா வற்றுக்கும் இறுதியில் இது நடக்கும்! ஆதியை தேடி...
உடல் நோயற்று இருப்பதும், மனம் கவலையற்று இருப்பதுமே முதல் இன்பம், இனி அதை நோக்கி பயணிப்போம்..!!