ஆட்டத்தை ஆரம்பித்த புதிய போலீஸ் கமிஷனர்... சென்னை இனி ரவுடிகள் இல்லாத நகரமாகும்!!
காவல்துறையின் கடும் நடவடிக்கைகள் மூலம் ரவுடிகள் இல்லாத மாநகரமாக சென்னை மாறும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். புதிய போலீஸ் கமிஷனராக பதவியேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அவரது உத்தரவின் பேரில் சென்னையில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையார், தியாகராயநகர், பரங்கிமலை உள்ளிட்ட 12 இடங்களில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து எதிர்காலத்திலும் மாதம் ஒரு முறை இது போன்ற முகாம்களை நடத்த வேண்டும் என்று துணை கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.