Facebox Member•••1
தமிழச்சி
20/5/2022, 1:02 pm
"நீங்க வெஜ்ஜா? இல்ல Non-வெஜ்ஜா?"
-இது இன்று நம்மில் பலரிடையே அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுள் ஒன்றாகிவிட்டது..!

நானும் உங்களைக் கேட்கிறேன், நமக்கென உணவுக்காகப் படைக்கப்பட்டவை தாவர வகைகள் மட்டுமே. பின்,
"அது என்ன Non -வெஜ்(Veg) ??"

"ஓ அதுவா... அதுதான் ஆடு,கோழி,பன்றி போன்றவற்றின் இறைச்சி உணவு.." -என்று சொல்கிறீர்களா??

அட ராமா..மற்ற உயிர்களைக் கொலை செய்து, அவற்றின் உடல்களை பல்வேறு துண்டுகளாக்கி, அத்துண்டுகளை அடுப்பிலே இட்டு, சமைத்து பின்னர் வாயிலே போட்டுக்கொள்வதற்குப் பெயர் Non-வெஜ்ஜா?

மனிதனுக்கென்று உணவு பட்டியலில் இருப்பது தாவர வகை உணவுகளே தவிர, விலங்குகள் அல்ல. அப்படியெனில் நாம் ஏன் நம்மைப் போன்ற இன்னொரு உயிரைக் கொலை செய்து சாப்பிடுகிறோம்?
பசிக்காகவா?? -என்றால் இல்லவே இல்லை.
"ருசிக்காகவே என்பதே உண்மை."

விலங்குகள் கூட பசிக்காகத்தான் மற்ற விலங்குகளைக் கொல்லும். ஆனால், மனிதனோ ருசிக்காகவே மற்ற உயிர்களைக் கொல்கிறான்.

கடவுள் படைப்பில், காடுகளில்தான் அறிவற்ற சிங்கம்,புலி போன்ற கொடூர விலங்கினங்கள் மற்ற உயிர்களைக் கொன்று உண்ணும். அது அவைகளின் சுபாவம். அவைகளின் இயற்கையான உணவு இறைச்சி. அதற்கேற்ப அவைகளின் வேட்டைப் பல் மற்றும் நகங்கள் நீண்டு உடல் அமைப்புகளும் அவற்றை வேட்டையாடி உண்ணும் படி அமைந்து உள்ளன. அவைகள்தான் ஐந்தறிவு உள்ள விலங்குகளாயிற்றே..!
ஆனால் மனிதனின் உடலமைப்பு அவ்வாறு இருப்பதில்லையே! ஏனெனில் நம் உடலமைப்பு தாவரத்தை உண்டு, ஜீரணிக்க ஏதுவாய் அமைந்துள்ளது.

ஆனாலும் இங்கு நாட்டிலேயும் பிற உயிர்களை வேட்டையாடும் வழக்கம் தான் அதிகரித்து வருகிறது.
பிறகு அந்த விலங்குகளுக்கும், நமக்கும் வித்தியாசம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே?
சிந்திக்கும் ஆறாம் அறிவுடைய மனிதனும், இறைச்சி எனும் மற்ற உயிர்களின் உடல்களை உண்ணுகின்றான்.
அதற்காகவே அந்த உயிர்களைக் கொலையும் செய்கின்றான்.

இது அநியாயம் இல்லையா? பாவம் இல்லையா?? அந்த பாவப்பட்ட விலங்குகளின் நிலையில் நாம் இருந்தால், நாம் எவ்வாறு துடிப்போம்? நம்முடைய உறவுகளுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்?
கொஞ்சமாவது இரக்கம் வேண்டாமா?
அது போன்ற எண்ணற்ற விலங்கின பிறவிகளைக் கடந்து அல்லவா உயர்ந்த மனிதப் பிறவி கிடைத்துள்ளது??

இப்பிறவியில் தர்மத்தைச் செய்து, மறுமைக்கு வேண்டியவற்றைத் தேடுவதை விட்டு அதர்மத்தைச் செய்வதால் யாருக்கு நஷ்டம்? நமக்கு தானே? '"அதே போன்ற விலங்கினமாக அடுத்த பிறவி கிடைத்து விடுமே!" என்கிற பயம் கூட இல்லையே!!

இதிலேயும் சில அறிவு ஜீவிகள் கேள்வி கேட்பார்கள் "நானா அந்த உயிர்களைக் கொன்றேன்? இறைச்சி கடைக்காரர் கொன்றார், நான் அதை வாங்கி வந்து சமைத்து உண்கிறேன், பின் கொன்ற பாவம் எப்படி என்னைச் சேரும்?"-என்று.

நீங்கள் அதை தின்பதற்காகவே அவர் அதைக் கொள்கிறார். என்று மனதில் கொள்ளுங்கள். ஆகவே அந்த கொலையிலும், பாவத்திலும் இருவருக்குமே பங்கு உண்டு என்பதை மறந்து விடாதீர். இது பஞ்ச மாபாதகங்களில் ஒன்று.

நம்மைப் போலவே அவைகளும் இந்த உலகினில் வாழப் பிறந்திருக்கின்றன. கடவுளும் படைத்திருக்கிறான். அவைகளுக்கும் ஆன்மாவாகிய உயிரும், உடலும், வலியும், இன்னும் மனைவி மக்களும் கூட இருக்கின்றது என்று சிந்தியுங்கள்..!இதையெல்லாம் பலரும் யோசிப்பதே இல்லை. யோசித்துப் பார்த்தாலும், நமக்கு ஒரு நீதி அவைகளுக்கு ஒரு நீதி என்று விட்டு விடுவோம்.அந்த விலங்குகளை விட அறிவு உள்ளவர்கள் என்பதால் நாம் அவைகளை அடக்கி, நமது இஷ்டத்திற்கும் அவைகளைத் துன்புறுத்துகிறோம்.

மனிதனுக்கு நற்குணங்களை வளர்க்கும் சாத்வீக உணவு என்பது முழுக்க முழுக்க தாவர வகை உணவுகளே என்பதில் ஐயம் இல்லை. மேலும் தாவர வகை உணவுகளில் இல்லாத உயிர்ச்சத்துக்களே இல்லை. நோயற்ற நீண்ட ஆயுளைத் தருவதும் தாவர வகை உணவுகளே.

விலங்குகளின் மாமிசத்தை உண்பதனால் மனிதனுக்கு உடல் ரீதியிலும் மன-ரீதியிலும் எண்ணற்ற கேடுகள் வந்து சேர்கின்றன. அந்த அறிவற்ற ஜீவ ராசிகளின் உடல்களை உண்பதினால் அவற்றைப்போன்ற தீய குணங்களும்,செயல்களுமே சம்பவிக்கும். நல்ல (சத்துவ) குணம் வளரவே வளராது. எளிதிலேயே நோய்களும் உண்டாகும்.

ஒரு மனிதன் இறந்து விட்டால் மட்டும், "அய்யோ பிணம்" என்று பயத்தாலும், அருவருப்பாலும் அஞ்சும் நாம்,
இறந்த மற்ற விலங்குகளைப் பார்க்கும் போது அவ்வாறு எண்ணுவதில்லையே ஏன்?
மாறாக அவற்றின் பிணங்களை காசுகொடுத்து வாங்கி சென்று, வீட்டில் வைத்து, தூண்டுகளாக்கி, சமைத்து, பின்னர் நடு வீட்டில் வைத்து நம் வயிற்றில் அல்லவா போட்டுக்கொள்கிறோம்?
அதுமட்டும் பிணங்கள் ஆகாதா??

"தனக்கோ, தன் குடும்பத்திற்கோ, தன் சொந்தங்களுக்கோ, தன் நண்பர்களுக்கோ ஏதாவது ஒன்று என்றால் துடிதுடித்துப்போய் விடும் நாம், மற்ற உயிர்களுக்கும் அப்படித்தானே என எண்ணாதது ஏனோ?" மனிதனின் உயிர் மட்டும் தான் உயிரா?
ஒருவேளை அவைகளுக்காக கேட்பதற்கு ஆள் இல்லையெனில் எது வேண்டுமானாலும் செய்து விடலாமா??

நாம் நம்மை விடச் சிறிய உயிர்களைக் காணும் போது அவற்றின் மீது இறக்கம் கொள்ள வேண்டுமேயன்றி,. அவைகளைக் கொன்று தின்று விடக்கூடாது. அது மிருகங்களின் செய்கையாகும். நாம் மனிதர்கள் அல்லவா?

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.( திருக்குறள்)
-இதன் பொருள் யாதெனில்,
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்பதே ஆகும்.

இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவ இராசிகளும் கடவுளால் படைக்கப்பட்டவை. ஆதலால் உயிர்களின் மேல் முழு அதிகாரமும் அவருக்கே உடையது . மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் அவையவை தாம்-தமது வழியில் தமது வாழ்வை வாழத் தகுதி உடையவை ஆகின்றன.

மற்றபடி ஒரு உயிரினத்தின் மீது, மற்ற உயிரினத்திற்கு அவற்றைக் கொள்ளவோ, துன்புறுத்தவோ அல்லது அவற்றைக் கொன்று உண்ணவோ எந்த உரிமையோ, தகுதியோ அறவே இல்லவே இல்லை என்பது தான் நீதி.

நம்மைப் போல அவையும் உயிர்கள், நமக்கு இந்த உலகில் வாழ எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு அந்த உயிர்களுக்கும் உரிமையும் தகுதியும் உள்ளது.

"அதெல்லாம் முடியாது நான் அந்த விலங்குகளைக் கொள்வேன், பின்னர் அவைகளை தின்பேன்!!" என்றால், அவரவர் செய்த ஊழ்வினை, இது போன்ற நல் வார்த்தைகளையும் எதிர்க்கும் படி செய்கிறது என்று அர்த்தம். அவற்றின் பாவங்களும், சாபங்களும் எங்குச் சென்றாலும் விடாது. இறந்த பிறகும் அதற்குரிய தண்டனைகளை நாம் நிச்சயம் பெறுவோம் என்பதில் சிறிதும் ஐயம் கொள்ளத் தேவை இல்லை.

"முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்"
"தன்வினைத் தன்னைச் சுடும்."
"தெய்வம் நின்று கொள்ளும்."

CREATE NEW TOPIC



Information

நீங்க வெஜ்ஜா? Non-வெஜ்ஜா?

From Facebox ® Global Friendly

Topic ID: 502

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...