சந்திராபவன் சிக்னலில் காரில் காத்துக் கொண்டிருந்தேன். கார் கதவை ஒரு குட்டி உருவம் தட்டியது. திரும்பிப் பார்த்தபோது ஒரு ப்ளாஸ்டிக் பையில் நெருங்கக் கட்டிய பூவை வைத்துக்கொண்டு "வாங்கிக்கோங்க சார்..." என்று கெஞ்சினாள் ஒரு சிறிய பெண். "வேண்டாம்" என்று சைகையால் சொல்லியபடி, வள்ளுவர் கோட்டம் நோக்கிச் செல்ல காத்திருக்க...
“சார் பசிக்குது சார்” என்ற குரல் மூடிய கதவை மீறி கேடடது, “நான் சாப்பாடு வாங்கித் தரவா?” என்றேன். வெளியே கேட்கவில்லை என்று கத்தி சொன்னாள். கதவைத் திறந்து, "நான் சாப்பாடு வாங்கித் தரேன்" என்று சொல்லும் போதே சிக்னல் விழுந்து விட, குழந்தையின் முகத்தில் நம்பிக்கை ஒளி மறைந்தது. பின்னால் நின்ற கார்கள் ஹாரன் அடிக்க ஆரம்பிக்க, “அந்த திருப்பத்தில் வண்டிய நிறுத்துறேன். வா வாங்கித் தரேன்” என்று சொல்லிவிட்டு சிக்னலில் வலதுபக்கம் எடுத்து வண்டியை பார்க் செய்து, இறங்கி அந்தக் குழந்தையை தேடினேன். அவள் எதிர் சிக்னலிலேயே நின்றிருந்தாள்.
நான் இங்கிருந்து கை காட்டினேன். என்னை ஆச்சர்யமாய் பார்த்தபடி அவளும் கை காட்டினாள். மிக ஜாக்கிரதையாய் ட்ராப்பிக்-ஐ கடந்து அந்த சிறிய பூப்பையோடு என்னருகில் வந்தாள்.“ஏன் அங்கயே நின்னுட்ட?” என்று கேட்டேன். “இல்ல சார்... எல்லோரும் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு வண்டிய எடுத்துனு போயிருவாங்க. நீங்களும் அப்படி போயிருவீங்கன்னு நினைச்சேன்" என்றாள்.
நான் எதுவும் பேசாமல் அருகில் இருந்த எஸ்.எஸ்.ஹைதராபாதி பிரியாணி கடையில் ஒரு சிக்கன் பிரியாணி பார்ச்சல் வாங்கிக் கொடுத்துவிட்டு "போதுமா? வீட்டுல யாராச்சும் இருக்காங்களா?" என்று கேட்டதற்கு "இதுவே போதும் சார். நான், ஆயா, என் தம்பி மட்டும்தான்." என்றாள்.
"வீடு எங்கே?"
"இதோ அந்த ரோட்டுல சர்ச் இருக்குல்ல அங்க தான் ப்ளாட்பாரத்துல ஆயாவோட இருக்கேன்." என்று சொல்லிவிட்டு, “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்” என்றவள் மீண்டும் தயங்கியபடி நின்றாள்.
"என்ன வேணும்?" என்றேன்.
"ஸ்கூலுக்கு நோட்டு புக் வாங்கித் தறீங்களா?" என்றாள்.
"படிக்கிறியா?"
"ஆமா! ஏழாவது படிக்கிறேன்"
"உன் பேரு என்ன?"
"மஹாலஷ்மி."
"இங்கே புத்தகக் கடை எங்க இருக்கு?" என்று கேட்டபோது பக்கத்தில் ஒரு கடையை காட்டினாள். அங்கு போய் பார்த்தபோது கடை பூட்டியிருந்தது. அவளின் முகம் வாடியது. “சரி விடு நாளைக்கு நான் உன்னைத் தேடி வந்து புக் வாங்கித்தரேன்." என்று சொன்னேன். மிக உற்சாகமாய் தலையாட்டியபடி, “தேங்க்ஸ் சார்.. அந்த சர்ச்சாண்ட தான் இருப்பேன். என் பேரு மஹாலஷ்மி” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
இரவு மீண்டும் அந்த வழியாய் வந்தபோது அந்த சர்ச் அருகே யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்தபடி வந்தேன். ஆனால் யாருமில்லை!!
மகாலட்சுமியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற கவலையோடு வீடு வந்து சேர்ந்தேன்...
- கேபிள் சங்கர்.