"முன்பு எப்போதோ நடந்த கொலை வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்காத பட்சத்தில், அப்போதிருந்த நீதிபதி துல்லியமாக குற்றவாளியை கண்டுபிடித்த கதையை நீங்களும் படியுங்கள்...
திடீரென்று ஒருவர் காணாமல் போய்விட்டார். எங்கெங்கோ தேடினார்கள். பத்திரிக்கையில் புகைப்பட விளம்பரம் செய்தனர். சுவர்கள், பேரூந்து நிறுத்தம், பூங்கா மின்சார ரயில் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் நோட்டீஸ் அடித்து ஒட்டினர்.
ஆனாலும், அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நீண்ட நாட்களாகியும் அவர் கிடைக்கவே இல்லை.
இந்த நிலையில் அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது போலீஸ். அவர் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது...
குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வாதாடினார். "கனம் நீதிபதி அவர்களே... யாரை இவர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளாரோ அவர் இன்னும் சற்று நேரத்தில் இந்த நீதிமன்றத்திற்கு உயிருடன் வரப்போகிறார். அந்த காட்சியை பார்த்தபிறகு, என் கட்சிக்காரர் குற்றமற்றவர்
என தெரியவரும்" என்றார்.
நீதிபதி உட்பட அங்கிருந்த அனைவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது. எல்லாரும் நீதிமன்ற வாசலையே ஆர்வத்துடன் பார்த்தனர். 10 நிமிடங்களுக்கு மேலாகியும் யாரும் வரவில்லை. இதனால் அனைவரும் அலுத்துப் போயினர்.
எனவே வழக்கறிஞரிடம் "கொலை செய்யப்பட்டவர் வருவார் என்று சொன்னீர்களே ஆனால் யாரையும் காணோமே? என்று கேட்டார் நீதிபதி.
"மன்னிக்க வேண்டும் நீதிபதி அவர்களே... காணாமல் போனவர் கொலைதான் செய்யப்பட்டார் என்பதை நீங்கள் உட்பட யாரும் நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் ஒருவித எதிர்பார்ப்புடன் வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தீர்கள். எனவே உங்கள் அனைவருக்கும் இருக்கும் சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார் வழக்கறிஞர்.
இந்த வாதம் சரியாதுதான் என்று நீதிமன்றத்தில் இருந்த அனைவருமே ஒப்புக் கொண்டனர்.
நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டு, பிற்பகலில் மீண்டும் கூடியது. அப்போது தன் தீர்ப்பை வாசித்தார் நீதிபதி.
"குற்றம் சாட்டப்பட்டவர்தான் கொலை செய்தார் என்பது தெளிவாகி விட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது" என்றார் நீதிபதி.
இதைக்கேட்டதும் வழக்கறிஞர் பதறிப்போனார்... "நீதிபதி அவர்களே'... என்று ஏதோ சொல்ல எழுந்த அவரை் அமருமாறு சைகையால் உத்தரவிட்ட நீதிபதி சொன்னார், "நாங்கள் அனைவருமே காணாமல் போனவர் திரும்பி வரப்போகிறார் என்று வாசலையே ஆவலுடன் பார்த்தது உண்மைதான். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தடவை கூட வாசலை பார்க்கவே இல்லை. தலை குனிந்தவாறே இருந்தார். எனவே அவரை இவர்தான் கொலை செய்தது என்பது உறுதியாகத் தெரிகிறது" என்றார் நீதிபதி.
அனைவரும் வாசலையே கவனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தபோது நீதிபதிமட்டும் குற்றம் சாட்டப்பட்டவரை கவனித்திருக்கிறார். எனவே தீர்ப்பைக் கேட்டதும் குற்றம் சாட்டப்பட்டவர் மறுப்பு கூறாமல் தண்டனையை ஏற்றுக் கொண்டார்.