"ஜாதியைப் பற்றி பேசறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. நாங்க ப்யூர் பிராமின். ஆனா வருஷத்துல 365 நாளும் சிக்கன் சமைக்கிறோம்!"
'அப்படியா?!?' என்று இதை கேட்பவர்கள் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அடைவதற்கு முன்... இந்த ஐயர் குடும்பம் இப்படி தினமும் சிக்கன் தயாரிப்பது தங்களுக்காக அல்ல. தாங்கள் பராமரிக்கும் தெரு நாய்களுக்காக.
பத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு தினமும் உணவு கொடுத்து பராமரித்து வருகிறார்கள் இந்த தம்பதிகள்.
இவர்கள் இப்போது இருப்பது மகாபலிபுரத்தில்.
"என்னுடைய பெயர் பத்மா. இவர் எங்க வீட்டுக்காரர். பெயர் கணேஷ்." இப்படி தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அந்த மயிலாப்பூர் மாமி.
இந்த பிராமண தம்பதியினர்,
சுமார் பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு மயிலாப்பூரை விட்டு இடம்பெயர்ந்து மகாபலிபுரம் வந்து, அங்குள்ள குருவிக்காரர்களோடு சேர்ந்து குதூகலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
கணேஷ் வைர வியாபாரம் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது மனைவி பத்மா, கோவில் ஐயரின் மகள்.
முப்பது வயது வரை குடும்பத்தோடு ஒன்றாக வாழ்ந்து வந்த கணேஷ், ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் வீட்டை விட்டு வெளியேறி வந்து விட்டார். அதன்பிறகு பத்மாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
"எங்களுக்கு சொந்தக்காரங்க
நிறைய பேர் இருக்காங்க. ஆனா அவங்க கூட இப்போ எங்களுக்கு எந்த ஒட்டும் உறவும் கிடையாது. இனிமேல் அவர்கள் தொடர்பு தேவையும் இல்லை. எங்களுக்கு குடும்பம் குட்டி குழந்தைகள் எல்லாமே இவங்கதான்" என்று அந்த ஊசி பாசி விற்கும் குடும்பங்களோடு ஒன்றாக இணைந்து வாழ்கிறார்கள் இந்த தம்பதியினர்.
சரி. மகாபலிபுரத்தில் இவர்கள் என்ன செய்கிறார்கள்! குருவிக் காரர்களுக்கு ஸ்பெஷலாக ஒரு கடை போட்டிருக்கிறார்கள். ஊசிமணி பாசிமணி, அதை கோர்ப்பதற்கான நூல்.
எல்லாவற்றையும் சென்னையில் இருந்து மொத்த விலையில் வாங்கிக் கொண்டு வந்து, நியாயமான விலையில் இங்கே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி செய்வதால் தேவையில்லாத அலைச்சலும் செலவும் இல்லாமல் போய்விட்டது இந்த குருவிக்காரர்கள் குடும்பங்களுக்கு.
மகாபலிபுரத்தில் உள்ள கணேஷ் ஐயர் கடையில் டீயும் பிஸ்கட்டும் எப்போதுமே இலவசமாக கிடைக்கும். இந்த குருவிக்காரர்களுக்கு மட்டும்.
"அவங்க காசு கொடுக்க வேண்டாம். ஃபிரீயாவே இதை கொடுக்கிறோம். அவங்களை எங்க குழந்தைகளாக நினைக்கிறோம்."
இவர்களுடைய கடையில் பலவிதமான பாசி மணிகள் மாலைகள் எல்லாம் இருந்தாலும், வெளியாட்கள் அல்லது வெளிநாட்டுக்காரர்கள் வந்து கேட்டால் கொடுப்பதில்லை.
"அதோ நிக்கிறாங்களே... அவங்க கிட்டே போய் வாங்கிக்கோங்க..." என்று இந்த குருவிக்காரர்கள் பக்கம் கையை காட்டி விடுவாராம் கணேஷ்.
'இவர்களைப் பற்றி தப்பு தப்பாக சில செய்திகள் வருகிறதே' என்று இந்த தம்பதிகளிடம் கேட்டால், உடனே பதில் வருகிறது பத்மாவிடமிருந்து.
"இருக்கலாம். இவர்களிலும் ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சில பேர் திருடலாம். பிச்சை எடுக்கலாம். ஏதாவது தவறு செய்யலாம். அதை வைத்து மொத்தமாக அவர்களை எடை போட்டு விடக்கூடாது அல்லவா ?" இப்படி பத்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே கணேஷ் குறுக்கிட்டு,
"எங்கேதான் தப்பு நடக்கல? ஏன், எங்க ஜாதியிலேயே எல்லோரும் நல்லவங்களா என்ன? நேர்மையும் பண்பாடும் நம்மை விட அதிகமாகவே இந்த ஊசி பாசி விற்கும் மக்களிடம் இருக்கிறது" என்று சொல்கிறார்கள் பத்மாவும் கணேஷும்.
இந்த குருவிக்காரர்களின் வாழ்க்கையை பற்றி ஆராய்ச்சி செய்து பிஹெச்டி பட்டம் வாங்க தயாராகி கொண்டிருக்கிறார் பத்மா. பாராட்டுக்கள் பத்மா! விரைவில் டாக்டர் பட்டம் வாங்க வாழ்த்துக்கள்!
சரி, பத்மாவின் ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும். இந்த தம்பதியினரின் ஜாதி மத பேதமற்ற சகஜமான வாழ்க்கையை ஆராய்ந்தால் நமக்கும் கூட ஒரு உண்மை புலப்படுகிறது.
இப்படிப்பட்டவர்கள் நம் நாட்டில் நிறைய பேர் உருவானால், நாடும் நன்றாக இருக்கும். நாமும் நன்றாக இருப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்