Facebox Member•••1
Vandhana
Vandhana
11/5/2021, 5:58 pm
கொரோனா பேசுகிறேன்...

ஏன் மனிதா  என்னை  கண்டு  பயப்படுகிறாய்...

நான் கிருமி அல்ல… கடவுளின்  தூதுவன்!

ஆயிரமாயிரம்  பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை  உடுத்தியவன் தானே  நீ? ஆயிரமாயிரம்  விலங்குகளை கொன்று பயணித்தவன் தானே  நீ? ஆயிரமாயிரம் மரங்களை அழித்து நாற்காலியில் அமர்ந்து தேனீர் பருகியவன் தானே நீ?

ஆயிரமாயிரம்  பறவைகளை  அழித்து தொலைபேசியில் உரையாடியவன் தானே நீ?

இப்போது புரிகிறதா  வலி  என்றால் என்ன  என்று?

பணத்துக்கு ஒரு நீதி..  வீதிக்கு ஒரு ஜாதி... பெயருக்கு ஒரு வாழ்க்கை... என வாழ்ந்தவன் தானே  நீ ..

இப்போது என்னை கண்டு பயந்து முடங்கி ஒளிகிறாய்... வானத்தை போல் பரந்த மனம்  கொண்டாயா? நிலத்தை போல் சமமாக பிறரை  நினைத்தார்? நீர் போல் தன்னலமின்றி தாகம்  தீர்த்தாயா? காற்றை போல் அனைத்தையும்  அரவணைத்தாயா? நெருப்பை போல் தீயதை பொசுக்க துணிந்தாயா?

பின் ஏன் வாழ துடிக்கிறாய்?

காற்றை மாசுபடுத்தவா?

இயற்கையாய் அழிக்கவா?

பூமியை கழிப்பிடமாக்கவா?

ஒன்றை மட்டும் புரிந்துகொள் உலகம் உனக்காக மட்டும் சுழலும் பம்பரம் அல்ல. இந்த உண்மையை உணர்ந்தால் கடவுளை கண்டுபிடித்த உனக்கு எனக்கான மருந்தினை கண்டுபிடிப்பது சிரமம் அல்ல...

அச்சம் கொள்ளாதே... பூமியில் உள்ள சில நல்ல உள்ளங்களுக்காக... உலகம் நிறைந்த பிஞ்சு குழந்தைகளுக்காக.. நானே வெளியேறுவேன்...

Message reputation : 100% (1 vote)
Facebox Member•••2
Krishna
Krishna
29/10/2021, 4:17 pm
நல்ல பதிவு சகோதரி

Facebox Member•••3
Vandhana
Vandhana
29/10/2021, 4:21 pm
Krishna wrote:நல்ல பதிவு சகோதரி
நன்றி ப்ரோ. இவ்வளவு நாட்கள் பிறகு இப்போது தான் என் பதிவு கண்ணில் படுகிறதா.

Facebox Member•••4
Krishna
Krishna
29/10/2021, 4:26 pm
Vandhana wrote:
Krishna wrote:நல்ல பதிவு சகோதரி
நன்றி ப்ரோ. இவ்வளவு நாட்கள் பிறகு இப்போது தான் என் பதிவு கண்ணில் படுகிறதா.
நான் ஃபேஸ்பாக்ஸ் உறுப்பினராக இணைந்து 2 வாரம்தான் ஆகிறது சகோதரி. எப்படி பதிவுகள் செய்வது என்று தெரியாமல் இருந்தேன். இப்போது தான் கற்றுக் கொண்டேன்.

Facebox Member•••5
Vandhana
Vandhana
29/10/2021, 5:19 pm
தளத்தின் ஓனர் பேச மாட்டாங்களோ?????

Administrator•••6
Facebox
Facebox
29/10/2021, 5:21 pm
Vandhana wrote:தளத்தின் ஓனர் பேச மாட்டாங்களோ?????
Welcome. I am watching you.

Facebox Member•••7
Vandhana
Vandhana
29/10/2021, 5:24 pm
I hate you. lol!

•••8
Sponsored content

CREATE NEW TOPIC



Information

கொரோனா பேசுகிறேன்

From Facebox ® Global Friendly

Topic ID: 337

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...