"ஒரு முத்தம் போதும்"
வியர்வை வடிய வடிய தலைமயிரைக் கூட வாறாமல் கண்ணீரைத் துடைத்தபடி ஓடிவருகிறான். கொஞ்சமாய் மேலே ஏறியிருந்த பாவாடையை கீழே இழுக்க முயல்கிறாள்... அவன் ஏதும் பேசாமல் மௌனமாக நின்றான். அவளுடைய கையையே பார்த்தபடி
அவள் அவனைப் பார்க்காமலிருக்க முயன்று கொண்டிருந்தாள்.
ஒரு நிமிட அமைதிக்குப்பின் அவன் வீறிட்டு அழுகின்றான். "ஏன்டி இப்படிப் பண்ண? செத்து போயிருந்தீண்ணா?"
அவள் அப்போதும் அவனைப் பார்க்கவில்லை. "யாருடி இருக்கா எனக்கு?" அவன் அவள் கால்மாட்டில் அமர்ந்து கொள்கிறான். அவள் கால்களை மெதுவாக இழுத்துக் கொண்டாள். அவள் அவனை விறைத்தபடி பார்த்துக்கொண்டே இருந்தாள். அவன் அவளுடைய கையை மெதுவாகத் தொட்டான்.
"கத்தியாலயா வெட்டினா?" என்று கேட்டு தடவினான். வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள்.
"நீ இல்லாட்டி நான் செத்துருவன்டி. பதறிட்டன்டி. சத்தியம் பண்ணு இனி இப்பிடி பண்ணா மாட்டா என்று" அவனுடைய கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கையை எடுத்து தன் தலை மேலே வைத்துக் கொண்டான். மீண்டும் சடாரென்று இழுத்துக் கொண்டாள். அவன் மீண்டும் அவள் பாதங்களுக்கருகில் அமர்ந்து அழ ஆரம்பித்தான்.
"நான் போறன்டா" அவனுக்கு பத்து நாட்களுக்குப்பின் உயிர் வந்தது. "எங்கடி போகப்போற?"
"எங்க போகப்போறன்... எதுக்குப் போகப்போறன்.. எவ்வளவு தூரம் போகப்போறன்... எதுவுமே புரியல"
"ஏய் லூசு தனியாவா போறே இருட்டா இருக்கும்டி" அவள் லேசாக சிரிக்கிறாள். "நானும் வாறன் சேர்ந்தே போவமா?"
அவள் குலுங்கிக் குலுங்கி சிரிப்பும் அழுகையும் கலந்து அழுகிறாள். அவன் அவளை இழுத்து அணைத்துக் கொள்கிறான். "இனி என்னைவிட்டு போயிராதம்மா - நீ - நான் - கிராண்டா ஒரு வெடிங் - உனக்கு பிடிச்ச இடத்துல ஹனிமூன் - நமக்குண்ணு கியூட்டா ஒரு பொண்ணு - சுட்டியா ஒரு பையன் - அழகான வீடு - அறுபது வயசுல உன் மடியில படுத்துக்கிட்டு உன் நெத்தில ஒரு முத்தம் இப்பிடி ரொம்ப கற்பனை பண்ணி வைச்சுறக்கன்மா"
அவள் ஏதுமே பேசாமலிருக்க அவள் கண்ணீர்த்துளிகள் அவன் மார்பை நனைத்தன.
"இப்பவுமா?"
"ஆமாம்மா... நேற்றுக் கூட" அவன்அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் இட்டான். அவளின் ஜென்மம் தீர்க்க அந்த ஒரு வார்த்தையும் ஒரு முத்தமும் போதுமாயிருந்தன. (அவளும் அவனும் நான்காண்டுகளாக காதலித்துக் கொண்டுள்ளார்கள். பத்து நாட்களுக்கு முன்பு அவள் ஒரு சிலரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். நினைவு தெளிந்த பின் தற்கொலை செய்து கொள்ள முயன்றாள். அப்போது அவன்.....
ஆரம்பத்திலிருந்து படியுங்கள்...