Facebox Member•••1
தமிழச்சி
தமிழச்சி
4/1/2021, 6:13 am
எல்லாம் விதிப்படி தான் நடக்கும்!!

விதி:

ஒரு நாள் எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து, “மானிடா இன்று உன்னுடைய வாழ்க்கையின் கடைசி நாள்” என்று சொன்னான்.

ஆனால் "நான் உன்னுடன் வரத் தயாராக இல்லை" என்றான் மனிதன்.

எமதர்மன் சொன்னான், ”இன்றைய பட்டியல்படி உன்னுடைய பெயர்தான் முதலில் உள்ளது" என்று.

"சரி நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டுவிட்டு போகலாம்" என்றான் மனிதன்.

"சரி அப்படியே செய்யலாம்" என்றான் எமதர்மன்.

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான் குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கிவிட்டான். உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெரை எடுத்து கடைசியில் எழுதி வைத்தான்.

எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் "மானிடா, நீ என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டாய் அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றிக் கொண்டேன்" என்று சொன்னான்.

"என்ன மாற்றம்?" என்று கேட்டான் மனிதன்.

"என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து உயிர்களை எடுக்காமல் கீழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன்" என்றான் எமதர்மன். அதைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் மனிதன்!!

நீதி: நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும்  விதியின்படி தான் எல்லாம் நடக்கும்.

CREATE NEW TOPIC



Information

எல்லாம் விதிப்படி நடக்கும்

From Facebox ® Global Friendly

Topic ID: 309

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...