ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒரு பேரழகன் இருக்கிறான்
ஒரு திறமைசாலி
இருக்கிறான்
அவன் மற்றவர்களை சிரிக்க வைக்கிறான்
அவனை இரசிக்க
வைக்கிறான்
அவனை நினைத்து
பெருமைப்பட
வைக்கிறான்
அதனால்
அவனை பலரும் நேசிக்கிறார்கள் ...
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒரு வீரன் இருக்கிறான்
அவன் எல்லாவற்றையும் எதிர்த்து பேராற்றல் கொண்டு போராடுகிறான் தன்மானத்தோடு
சுயமரியாதையோடு வாழ்கிறான்
அதனால்
அவனை பலரும் நேசிக்கிறார்கள் ...
எல்லா மனிதருக்குள்ளும்
ஒரு கோழை இருக்கிறான்
அவன் தான் நேசித்து பிரிந்த
ஏதோ ஒன்றை நினைத்து இதயத்திற்குள் அழுது கொண்டிருக்கிறான்
தன்னலம் பேணாத
பைத்தியக்காரன் அவன்
சுயநலம் கொள்ளாத
ஏதோ ஒரு அன்பை
இதயத்தில் சுமந்து கொண்டிருக்கிறான் ...
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும்
ஒரு பைத்தியக்காரன் தான்
வாழ்வின் அர்த்தமுள்ள உணர்வுகளையும்
நினைவுகளையும் சுமந்து கொண்டிருக்கிறான் ...
நேசம் கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருக்கலாம்
ஆனால்
அந்த பைத்தியக்காரன்
ஏதோ ஒன்றைத்தான்
கொண்டாடி
கொண்டிருக்கிறான் ...
இவை
கடக்க முடியா
விளக்க நினைக்காத
பேரன்பின்
நிலையொன்று
பெருங்காதல்
விதியன்றோ ?..
~விசித்திரன்.
ஒரு பேரழகன் இருக்கிறான்
ஒரு திறமைசாலி
இருக்கிறான்
அவன் மற்றவர்களை சிரிக்க வைக்கிறான்
அவனை இரசிக்க
வைக்கிறான்
அவனை நினைத்து
பெருமைப்பட
வைக்கிறான்
அதனால்
அவனை பலரும் நேசிக்கிறார்கள் ...
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒரு வீரன் இருக்கிறான்
அவன் எல்லாவற்றையும் எதிர்த்து பேராற்றல் கொண்டு போராடுகிறான் தன்மானத்தோடு
சுயமரியாதையோடு வாழ்கிறான்
அதனால்
அவனை பலரும் நேசிக்கிறார்கள் ...
எல்லா மனிதருக்குள்ளும்
ஒரு கோழை இருக்கிறான்
அவன் தான் நேசித்து பிரிந்த
ஏதோ ஒன்றை நினைத்து இதயத்திற்குள் அழுது கொண்டிருக்கிறான்
தன்னலம் பேணாத
பைத்தியக்காரன் அவன்
சுயநலம் கொள்ளாத
ஏதோ ஒரு அன்பை
இதயத்தில் சுமந்து கொண்டிருக்கிறான் ...
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும்
ஒரு பைத்தியக்காரன் தான்
வாழ்வின் அர்த்தமுள்ள உணர்வுகளையும்
நினைவுகளையும் சுமந்து கொண்டிருக்கிறான் ...
நேசம் கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருக்கலாம்
ஆனால்
அந்த பைத்தியக்காரன்
ஏதோ ஒன்றைத்தான்
கொண்டாடி
கொண்டிருக்கிறான் ...
இவை
கடக்க முடியா
விளக்க நினைக்காத
பேரன்பின்
நிலையொன்று
பெருங்காதல்
விதியன்றோ ?..
~விசித்திரன்.