Facebox Member•••1
Post Truth
Sun 10 May 2020, 6:56 pm
ஆகஸ்டு மாதத்திற்கு தயாராகிறது பாரதம்.. ஆம்! கடந்த ஆண்டுதான் பாரதத்துடன் காஷ்மீர் இணைக்கப்பட்டது. அதன் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு இந்திய யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டு உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தது இந்திய அரசு. ஆனால் தற்போது வரையில் காஷ்மீர் முழுமையாக இல்லாமல் மூன்று துண்டுகளாகவே இருக்கிறது.

அதைத்தான் தற்போது இந்தியாவின் வரைபடத்தில் இணைத்து காஷ்மீர் முழுமையாக இந்திய அரசுக்கு சொந்தமான நிலப்பரப்பாக அதிகாரப்பூர்வமாக காட்டப்பட்டிருக்கிறது. இது நேற்று முன்தினம் நடந்தது, அதனை தொடர்ந்து கூகுள் மேப்பிலும் மாற்றப்பட்டுள்ளது.

மிகச் சிறந்த ஆளுமை திறனாக பிரம்மிக்க வைத்திருக்கிறது இந்திய அரசு.

எப்படி?

நம்மை போல் அல்லாமல் பாகிஸ்தான் அப்பகுதிகளை "ஆஷாத் காஷ்மீர்" அதாவது சுதந்திர காஷ்மீர் என உலகுக்கு அறிவித்து ஒரு அதிபரையும் (வேறென்ன டம்மி பீஸ் தான்) உருவாக்க வைத்து பராமரித்து வந்தது. போதாததற்கு பாருங்கள் ஜகத்தீரே நாங்கள் சுதந்திர காஷ்மீர் உருவாக்க தான் பாடுபடுகிறோம் என உலகை ஏமாற்றி வந்தது. அங்கு தேர்தலும்??? நடத்தி அதிபரை தேர்வு செய்ததாக காட்டி வந்தது.

(இதை தான் இங்கு உள்ள கழிசடைகள் கடந்த ஆண்டு காஷ்மீர் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும், இந்திய அரசு அல்ல என்று கூப்பாடு போட்டு வந்தனர். இனி ரத்த ஆறு ஓடும் என மிரட்டி பார்த்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.)

சரி விஷயத்திற்கு வருவோம்.ஆக சட்டபூர்வ காஷ்மீர் தற்போது பாகிஸ்தானுக்கு சொந்தமானது அல்ல, அதை அவர்களே சொல்லி விட்டார்கள் அல்லவா. அப்ப ஆஸாத் காஷ்மீர் தனிப்பட்ட விஷயம். இதில் பாகிஸ்தான் தலையிட முடியாது, காரணம் மக்கள் தேர்தலில் ஓர் அதிபரை தேர்வு செய்து உள்ளனர்.  ஆனால் காஷ்மீர் முன்னரே இந்தியாவுடன் இணைக்கப்பட்டவிட்டது அதனை ஆண்ட அரசன் ஹரி சிங் என்பவரால். ஆக சட்ட பிரகாரம் இஃது இந்திய சொத்து.

இப்போது வெளிநாட்டு பிரஜைகளை வெளியேறும் படி இந்திய அரசு சொல்லிவிட்டது. இதில் உள்ள தமாஷான விஷயம் என்னவென்றால்? முதலில் ஓடியது அதன் அதிபர் தான். தலையில் அடித்து கொள்ளாத குறை இம்ரான்கானுக்கு.

அவர்கள் ராணுவமோ தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டது. அதுதான் தற்போது அங்கு நடக்கும் துப்பாக்கி மற்றும் பீரங்கி சண்டை. இது நடப்பது பாகிஸ்தான் பராமரிப்பு செய்துவந்த காஷ்மீரில்....

அடி வாங்குவது என்னவோ பாகிஸ்தான் தான், ஆனால் அலறுவது சீனா... இது மாதிரியான தருணத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது பாக்கிஸ்தான். ஏனெனில் இந்தியா பெரிய அளவில் ஏதேனும் செய்தால் வடிவேல் பாணியில் அய்யய்யோ சங்கத்த உடனே கலைங்கடா  என்பது போல பாகிஸ்தானே பிரிந்து போக காத்துக்கொண்டு இருக்கிறது. அவ்வளவு கடன் சுமை....நாடு இருந்தால் தானே கொடுத்த கடனை திருப்பி தர வேண்டும் இது அவர்களின் கணக்கு.

அடுத்ததாக சீனாவிடமே நேரிடையாக சொல்லிவிட்டது "அக்க்ஷை சின்" பகுதியில் இருந்து வெளியேறும் படி. மறுத்தால் முறத்தால் அடிக்க உலக நாடுகளே அணி திரண்டு நிற்கின்றனர். அவ்வளவு பாசம் கொரானா தந்த சீனா மீது. விழி பிதுங்கி நிற்க வைத்து இருக்கிறது  இந்தியா தன் ராஜதந்திர நகர்வின் மூலம்.

ஆம். சீனாவின் முதலீடு இந்த belt and road திட்டம் தான். தரை மார்கத்தில் உலக அளவில் வர்த்தக இணைப்பு  சாலை வழித்தடம். இதில் சீனாவின் மூலதன மதிப்பில் சுமார் 34% இதில் கொட்டப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரானா பீதியில் உலக வர்த்தக உறைந்து போய் விட்டது.ஏதேனும் பிரச்சினை என்றால் ஒத்த பைசா சீனாவிற்கு போய் சேராது.

அதேசமயம் இந்த வழித்தடத்தில் தான் அக்க்ஷை சின் பகுதி வருகிறது, இதனையும் விட்டுக்கொடுக்க முடியாது. வெளியேற மாட்டேன் என்றும் இந்தியாவிடம் சொல்லவும் முடியாது. நையப் புடைத்து விடுவார்கள் என்று உணர்ந்து இருக்கிறது சீனா.

ஏற்கனவே திபெத் தன்னாட்சிப் பகுதியாக அறிவிக்கும் வேலையில் திரைமறைவில் இந்தியா உள்ளதாக சீனா பொங்கி கொண்டு இருக்கிறது. ஆனாலும் அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் நேபாளத்தை மீண்டும் இந்து தேசமாக அந்நாடு அறிவித்ததுவிட்டது. பின்புலம் யார் என்று சொல்லத்தான் வேண்டுமா? இதை பார்த்து திபெத்திய மக்கள் எழுச்சி கொண்டு உள்ளனர். நம்மை விட அவர்கள் தான் மோடி அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து உள்ளனர்.போதாக்குறைக்கு தலாய் லாமா தன் காலத்திற்குள்ளாக திபெத்தை மீட்கப்பட வேனும். அதற்கு உண்டான தருணம் இது, தனக்கு அதற்குண்டான சகுனங்கள் தோன்றுவதாக செய்தி பரப்பி வருகிறார்.

ஆக அகண்ட பாரதம் இனி பேச்சில் இல்லை...
செயலில்.!!

Message reputation : 100% (4 votes)
Facebox Member•••2
avatar
Sat 16 May 2020, 8:07 pm
அருமையான பதிவு

CREATE NEW TOPICInformation

சத்தம் இல்லாமல் ஓர் சரித்திரம்!

From Facebox

Topic ID: 254

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...