Facebox Member•••1
தமிழச்சி
on Sun 10 May 2020, 6:09 pm
பார்ப்பதற்கு தேவதை மாதிரி இருக்கும் அழகான ஒரு பெண் விமானத்தில் ஏறினாள்... தனது சீட்டை தேடிப்போய் பார்த்தபோது, அவளது இருக்கைக்கு அடுத்த இருக்கையில் இரண்டு கையையும் இழந்த ஒருவர் அமர்ந்திருந்தார்...

அவரைப் பார்த்ததும் அவளுக்கு ஒரு மாதிரி அசூசையா இருந்துள்ளது.... இந்தாளு பக்கத்தில நாம எப்படி உக்காருவது?... என்று யோசித்து, விமான பணிப்பெண்ணை அழைத்து, "எனக்கு வேறு இடத்தில சீட் அரேஞ் செய்து தாருங்கள்." என்று கேட்டாள். அதற்கு விமான பணிப்பெண், "ஏன் என்னாச்சு உங்க சீட்டுக்கு?" என்று கேட்டார், "எனக்கு அவர் பக்கத்தில உக்கார்ந்து வருவதற்கு அருவருப்பாக இருக்கிறது." என்று சொன்னதும், விமான பணிப்பெண்ணுக்கு அதிர்ச்சியாக இருந்தது...

பார்க்க டீசென்ட்டா இருக்காங்க... ஆனா நாகரீகம் இல்லாம பேசுறாங்களே என்று சங்கடப்பட்டாலும், ஏதும் பண்ண முடியாதே... அவங்க பயணியாச்சே... எனவே, "இருங்க மேடம் நான் பாக்குறேன்" என்று சொல்லிட்டு தேடியபோது, எங்கேயும் சீட் காலியாக இல்லை. எனவே,"மேடம்... எந்த சீட்டும் காலி இல்லை. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க நான் கேப்டன் கிட்ட பேசிட்டு உங்களுக்கு வேற ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய முடியுமான்னு கேட்டு வருகிறேன்" என்று சொல்லிட்டு கேப்டன் ரூம்க்கு போனார்...

சிறிது நேரத்தில திரும்பி வந்து, "மேடம், நீங்க எடுத்திருக்கிற டிக்கெட் எக்கானமி கிளாஸ். ஆனா எக்கானமி க்ளாஸ்ல உங்களுக்கு  ஒதுக்குறதுக்கு வேறு சீட் இல்லை. முதல்வகுப்பு பிரிவில் மட்டும் தான் ஒரு சீட் காலியாக இருக்கிறது. ஆனாலும் நீங்க எங்களோட மதிப்பு வாய்ந்த பயணி. எனவே.உங்களின் கோரிக்கையையும் பரிசீலிக்காமல் இருக்க முடியாது. எனவே, எங்கள் விமானப் பயண வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு எக்கானமிக் கிளாஸ் பயணிக்கு முதல் வகுப்பு சீட்டை ஒதுக்க போறோம். நீங்கள் மகிழ்ச்சியாக பயணம் செய்யலாம்" என்று சொன்னார். உடனே அந்தப் பெண்ணுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. விமானப் பணிப்பெண்ணின் பதிலுக்கு கூட காத்திருக்காமல், முதல் வகுப்புக்கு இருக்கைக்கு செல்லத் தயாராகும் போது....

விமான பணிப்பெண் அந்த இரண்டு கைகளையும் இழந்தவரிடம் சென்று, "அய்யா, சிரமத்திற்கு மன்னித்து விடுங்கள்... உங்களை முதல் வகுப்பு இருக்கைக்கு மாற்றியிருக்கிறோம்... எனவே உங்களது லக்கேஜ் எல்லாம் நான் எடுத்துக் கொள்கிறேன் வாருங்கள் செல்லலாம். உங்கள் பக்கத்தில இவங்களை போல ஒருத்தரை உக்காரவைக்க எங்களுக்கு மனமில்லை." என்று பணிவாக சொன்னதும் விமானத்தில் இருந்தஅனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்து அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்....

அந்த அழகான பெண்ணுக்கு மிகுந்த அவமானமாகி சங்கடத்தோட நெளிந்து நின்றாள்...

அப்போது கைகளை இழந்த அந்த நபர் எழுந்து சொன்னார், "நான் ராணுவத்தில் இருந்த சமயத்தில் நடந்த கார்கில் போரில் என்னுடைய இரண்டு கைகளையும் இழந்திட்டேன். முதல் முறையாக இந்தப் பெண் சொன்னதை கேட்டதும், இவர்களுக்காகவா நாம கஷ்டப்பட்டு யுத்தம் செய்தோம்? என்று வருத்தமாக இருந்தது... ஆனால் நீங்கள் எல்லாரும் கை தட்டி ஆராவாரம் செய்தது மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... உங்களை போன்ற நல்ல குடிமக்களுக்காக நான் கைகளை இழந்ததற்காக சந்தோசப்படுறேன்..." என்று சொல்லிகிட்டே முதல்வகுப்பை நோக்கி மெதுவா நடக்கத் தொடங்கினார்...

அந்த பெண்மணியோ அவமானத்தின் உச்சத்தில் இருந்தாள்... யாரையும் பார்க்கும் தைரியமின்றி தலையை குனிஞ்சு உட்கார்ந்திருந்தாள்...

அழகு என்பது நாம பாக்கும் வெளித்தோற்றத்தில் இல்லை... அது மனசு சம்பந்தப்பட்ட விசயம்.... அது நம் நடத்தையில்தான் வெளிப்படும்... அதை உணர்ந்து நடந்துக்க முயற்சி செய்வோம்..

Message reputation : 100% (1 vote)

CREATE NEW TOPIC



Information

அழகு என்பது தோற்றத்தில் இல்லை!

From Facebox

Topic ID: 253

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...